Head

திருச்சிக்கு புதிய தொல்பொருள் வட்ட அலுவலகம் 27/08/2020

 



தமிழகத்தில் தொல்பொருள் துறையில் சென்னையை அடுத்த திருச்சி புதிய தொல்பொருள் வட்டமாக அறிவித்து மத்திய கலாச்சாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




தமிழகத்தில் விழா மாமல்லபுரம் கடற்கரை கோயில் அங்குள்ள பல்லவர் கால சிற்பங்கள் மற்றும் வேலூர் கோட்டை புதுக்கோட்டை சித்தன்னவாசல் மதுரை திருமலை நாயக்கர் மஹால் கீழடி தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் செஞ்சி கோட்டை கங்கைகொண்ட சோழபுரம் சென்னை அருங்காட்சியகம் மற்றும் தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த நூற்றுக்கணக்கான கோயில்கள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ள பாரம்பரிய புராதன சின்னங்கள் இதுவரை சென்னை வட்ட தொல்பொருள் துறையின் கீழ் இயங்கி வந்தது.



தற்போது மத்தி ய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகம் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் தொல்பொருள் துறைக்கு புதிய வட்டங்களை உருவாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




திருச்சியை புதிய தொழில் துறை வட்டமாக அறிவித்து அதில் ஒரு புதிய கண்காணிப்பாளர் அலுவலகம் அமைத்து அதன் கீழ் தென் மாவட்டங்களில் உள்ள தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் புராதன சின்னங்கள் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.





இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து  கலாச்சாரம் மற்றும் தொல்பொருள் நிகழ்வுகள் எல்லாம் சென்னை ஜார்ஜ் கோட்டை உள்ள அலுவலகத்திலேயே பதிவு செய்யப்பட்டு வந்தது.


ஆனால் தற்போது திருச்சியில் தொல்பொருள் அலுவலகம் அமைத்து தென்மாவட்டங்கள் இருக்கும் புராதான சின்னங்கள் கோவில்கள் தொடர்பான மற்றும் கலாச்சாரம் தொடர்பான அனைத்தையும் கண்காணிக்க தொல்பொருள் கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்கப்படுகிறது.



மேலும் இந்தியாவில் தமிழகம் மட்டுமன்றி குஜராத் மத்தியப்பிரதேசம் உத்தரப்பிரதேசம் மேற்கு வங்காளம் டெல்லி கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் அங்குள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்களை பிரபலப்படுத்தும் வகையில் புதிய தொல்பொருள் வட்டங்களை உருவாக்கி மத்திய கலாசார துறை அறிவித்துள்ளது.


மாமல்லபுரம் கடற்கரை கோவில் சென்னை வட்ட தொல்பொருள் கண்காணிப்பு அலுவலகத்தில் மூலம் பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Post a Comment

0 Comments